மாணவியை மானபங்கப்படுத்திய குற்றத்திற்காக வடமாநில வாலிபருக்கு 10 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறில் இருக்கும் கல்வி நிறுவனத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த நிர்மல் குமார் என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு அடையார் கஸ்தூரிபா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் வீட்டிற்குள் நிர்மல் குமார் நுழைந்து விட்டார். பின் நிர்மல் குமார் அங்கிருந்த கல்லூரி மாணவியை தாக்கி மானபங்கப்படுத்தியுள்ளார். இதனால் மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று நிர்மல் குமாரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நிர்மல் குமாரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த சென்னை மகளிர் நீதிமன்றம் நிர்மல் குமாருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 10 ஆயிரம் ரூபாயை அபராத தொகையில் இருந்து இழப்பீடாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்..