வடமாநில தொழிலாளி 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முட்டிநாடு கிராமத்தில் கேரட் அறுவடை பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கு மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற தொழிலாளி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வேலைக்கு சென்று வரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் தனது மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.
இதனால் சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சுரேஷ் அந்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. அதன்பிறகு காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் சுரேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.