Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அவதிப்பட்ட காவலாளி…. வெளிமாநில வாலிபருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட வெளிமாநில வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் ஒடிசா மாநிலத்தை சாகர் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த குமார் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமாரின் பிணத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |