விதிமுறைகளை மீறி வட மாநிலத் தொழிலாளர்களை ஏற்றி வந்த சொகுசு பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கயம்-சென்னிமலை சாலை பகுதியில் தேங்காய் உலர் களம் செயல்பட்டு வருகிறது. இங்கு பீகாரிலிருந்து 63 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஒரு சொகுசு பேருந்து வந்துள்ளது. இதனை அறிந்த வருவாய் துறை அதிகாரிகள் அந்த சொகுசு பேருந்துகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்துள்ளனர். இதனை அடுத்து அதில் வந்த வட மாநிலத் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அசாம் மாநிலத்தில் இருந்து 2 பேருந்துகளில் 94 தொழிலாளர்கள் தாராபுரம் பகுதியில் இருக்கும் உலர் களத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
அதன் பின் அதிகாரிகள் 2 பேருந்தின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படுவதால் அரசு நெறிப்படுத்திய விதிமுறைகளை பின்பற்றாமல் வட மாநிலத் தொழிலாளர்களை அழைத்து வருவதாக கூறியுள்ளனர். எனவே விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக சொகுசு பேருந்துகளை பறிமுதல் செய்ததோடு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.