Categories
உலக செய்திகள்

இனிமேல் குழந்தைகளுக்கு…. வெடிகுண்டு என்று தான் பெயரிட வேண்டும்… அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நாடு…!!!

வடகொரிய அரசு, பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு செயற்கைக்கோள், வெடிகுண்டு என்று பெயர்கள் வைக்குமாறு உத்தரவிட்டதோடு மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்திருக்கிறது.

வடகொரிய அரசு பெற்றோர்கள், தங்களின் பிள்ளைகளுக்கு செயற்கைக்கோள், விசுவாசம் வெடிகுண்டு, என்று பெயர்கள் வைக்க வேண்டும் என அறிவித்திருக்கிறது. இவ்வாறு பல பெயர்கள் கூறப்பட்டிருக்கிறது. தேசப்பற்றை மக்களிடம் வளர்க்கும் வகையில், அந்த பெயர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன், அன்பானவர், பேரழகு என்று தென் கொரியா பயன்படுத்தியது போல அன்பு தொடர்பான பெயர்களை வடகொரியா அனுமதித்திருந்தது. ஆனால் இந்த பெயர்களை இனிமேல் குழந்தைகளுக்கு வைக்கக்கூடாது என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

அவ்வாறான அன்பு குறித்த பெயர்களை வைத்திருந்தால் உடனே தேசப்பற்று மிகுந்த பெயர்களாக மாற்றி விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. அரசாங்கத்தின் இந்த உத்தரவை பின்பற்றாவிட்டால் பெற்றோர்களுக்கு கடும் அபராதம் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |