Categories
உலக செய்திகள்

தென்கொரிய எல்லைக்கு அருகில்… வடகொரியா நடத்திய பீரங்கி சோதனை….!!!

தென்கொரிய நாட்டின் எல்லை பகுதிக்கு அருகில் வடகொரியா பீரங்கி குண்டுகளை சோதனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வட கொரியா, அடிக்கடி ஏவுகணை பரிசோதனை செய்து அண்டை நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அந்நாட்டின் மீது பல நாடுகளும் பொருளாதார தடைகளை அறிவித்தாலும், கொரோனா பாதிப்பால் பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தாலும், அதனை வட கொரிய அரசு கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தென் கொரிய நாட்டின் எல்லைப் பகுதிக்கு அருகே வடகொரியா பீரங்கி குண்டுகளை கடலுக்குள் வீசி சோதனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி தென் கொரிய நாட்டின் ராணுவம் தெரிவித்திருப்பதாவது, வடகொரிய நாட்டை அதிகமாக கண்காணித்துக் கொண்டிருக்கும் நிலையில், தங்கள் நாட்டின் எல்லை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காலை நேரத்தில் பீரங்கி குண்டுகளின் சத்தம் கேட்டது என்று குறிப்பிட்டிருக்கிறது.

Categories

Tech |