Categories
உலக செய்திகள்

வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள்…. சீனாவிடம் உதவி கோரும் அமெரிக்கா…!!!

வடகொரியா மேற்கொள்ளும் ஏவுகணை சோதனைகளால் பதற்றம் ஏற்பட்ட நிலையில் அமெரிக்கா, சீன நாட்டின் உதவியை கோரியிருக்கிறது.

வடகொரியா அடிக்கடி ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொள்வது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சராக இருக்கும் ஆண்டனி ப்ளிங்கன், வடகொரிய நாட்டை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்காக சீனாவிடம் உதவி கோரியுள்ளார்.

அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் அவர் சீன நாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார். அங்கு வடகொரியா மேற்கொள்ளும் ஏவுகணை பரிசோதனை குறித்த பிரச்சனையை தீர்ப்பதற்கான முயற்சிகள் பற்றி விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிளிங்கன், நிபந்தனைகள் இல்லாமல், இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவு முன்னேற்றம் தொடர்பில் பேசுவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். கொரிய தீபகற்பத்தில், அணு ஆயுதம் இல்லாத நிலையை காண்பதற்கு உறுதியாக உள்ளோம் என்றும் கூறியிருக்கிறார்.

Categories

Tech |