Categories
உலக செய்திகள்

வெடித்துச் சிதறிய வடகொரியாவின் ஏவுகணை…. தென்கொரியா வெளியிட்ட தகவல்…!!!

வடகொரியாவின் ஒரு ஏவுகணை நடுவானில் பறந்த போது திடீரென்று வெடித்துச் சிதறியது என்று தென்கொரியா தெரிவித்திருக்கிறது.

வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை மேற்கொண்டு அண்டை நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களுக்கு எதிராக வடகொரியா செயல்பட்டு வருகிறது. அணு ஆயுதங்களையும், ஆபத்தான ஏவுகணைகளையும் சோதனை செய்வதால், பல நாடுகள் வடகொரியா மீது கடும் பொருளாதார தடைகளை அறிவித்தன.

இதன் காரணமாக அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. எனினும் தங்கள் ராணுவத்திறனை மேம்படுத்த வடகொரியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வருடத்தில் மட்டும் சுமார் பத்து தடவை ஏவுகணை சோதனையை வடகொரியா செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் வடகொரியா ஏவிய ஒரு ஏவுகணையானது சுமார் 20 கிலோமீட்டர் உயரத்தில் பறந்தபோது திடீரென்று வெடித்து சிதறியது என்று தென்கொரியாவை சேர்ந்த ஒரு ராணுவ அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |