தென் கொரிய அரசு, அணு ஆயுத சோதனைக்கு வடகொரியா தயாராகிக் கொண்டிருப்பதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
வட கொரிய நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன், கடந்த 2011-ம் வருடத்தில் பதவியேற்றதிலிருந்து தொடர்ந்து சக்தி வாய்ந்த மிகப்பெரிய ஏவுகணைகளையும் ஆயுதங்களையும் சோதனை செய்து வருகிறார். ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கொண்டு வந்த தீர்மானங்களை மீறிவருகிறார். எனவே, அமெரிக்கா போன்ற நாடுகள் வட கொரிய நாட்டின் மீது கடும் பொருளாதார தடைகளை அறிவித்தன.
எனினும், ஐந்து வருடங்களுக்கு பின் முதல் தடவையாக கடந்த 24 ஆம் தேதி அன்று தொலை தூரத்திற்கு செல்லக்கூடிய மிகப்பெரிய சக்தி வாய்ந்த ஏவுகணையை வடகொரியா சோதனை செய்தது. அமெரிக்க நாடு வரை சென்று தாக்கக்கூடிய அந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக வடகொரியா தெரிவித்தது.
இந்நிலையில் தற்போது வடகொரியா அடுத்த நிலையாக அணு ஆயுத சோதனைக்கு தயாராகி கொண்டிருப்பதாக தென்கொரிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.