Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எதுக்கு இப்படி பண்ணாங்க…. எல்லாம் நொறுங்கி நாசமானது…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

பேருந்தின் மீது கல்லை வீசி விட்டு தப்பி சென்ற 5 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை கோயம்பேட்டில் இருந்து புதுச்சேரிக்கு இரவு 11 மணி அளவில் அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்தப் பேருந்தை காஞ்சிபுரம மாவட்டம் தின்பசமுத்திரத்தை சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இதில் கண்டக்டராக சென்னை கிண்டியை சேர்ந்த விண்பால் என்பவர் இருந்துள்ளார். இந்த பேருந்தில் அரசு விதிகளின்படி 50% பயணிகள் பயணம் செய்தனர்.

இதனையடுத்து பேருந்து கிழக்குக் கடற்கரைச் சாலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சம்புவெளி தெரு அருகில் அதிகாலை 2 மணி அளவில் சென்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத 5 நபர்கள் திடீரென வழிமறித்து பேருந்தின் முன்பக்க கண்ணாடியை கல்வீசி தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதனால் பேருந்தின் கண்ணாடி உடைந்து நொறுங்கி நாசமானது. இதுகுறித்து பேருந்து டிரைவர் விஸ்வநாதன் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பேருந்து கண்ணாடியை உடைத்து 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |