நிலச்சரிவில் சிக்கி 7 நபர்கள் உயிரிழந்த சம்பவம் நார்வே நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய கண்டங்களில் நார்வே நாட்டில் ஓஸ்லோ தலைநகரில் ஆக்ஸ் என்னும் கிராமம் உள்ளது. இங்கு பனிப்பொழிவு வழக்கத்தை விட அதிக அளவில் இருந்தது. ஆக்ஸ் கிராமத்தில் ஆயிரம் பேர் வசித்து வரும் நிலையில் அங்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் ஆக்ஸ் கிராமத்தில் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தது. வீடுகளில் இருந்தவர்களும் மண்ணுக்குள் புதைந்தனர்.
இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்ட அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மண்ணுக்குள் புதைந்த 10 பேரை மீட்பு குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3 பேரின் நிலைமை என்ன ஆனது என்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புக் குழுவினர் கூறியதாவது, நிலச்சரிவு ஏற்பட்டு ஐந்து நாட்கள் ஆனதால் மூன்று பேரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என தெரிவித்தனர்.