மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படட ஆய்வறிக்கை துறைவாரியான வளர்ச்சி குறித்த அறிக்கையாக அமையவில்லை என்று ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
இன்று நடைபெற்ற மாநிலங்களவை கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது ஆய்வறிக்கையில் , 2019-20 நிதியாண்டிற்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7 சதவீதமாகவும் , கடந்த நிதி ஆண்டில் பற்றாக்குறை 5.8 சதவீதமாகவும் இருந்தது என்றும் கூறினார்.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் கூறுகையில் , பொருளாதார ஆய்வறிக்கை தன்னைத் தானே பாராட்டிக் கொள்வதாக அமைந்துள்ளது. துறைவாரியான வளர்ச்சி குறித்த அறிக்கையாக அமையவில்லை.பொருளாதார ஆய்வறிக்கையின் மூலம் இந்த அரசு நம்பிக்கையற்ற முறையில் பேசுவதாக நான் கருதுகின்றேன் என்று விமர்சித்துள்ளார்.