Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரு தேவாலயம் கூட பாக்கி இருக்காது; ஒரு மசூதி கூட பாக்கி இருக்காது – எச்சரித்த கே.பி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பொதுக்கூட்டத்தில் பேசிய போது,  ஆர்.எஸ்.எஸ்-ஐ விட ஒரு பயங்கரவாத அமைப்பு இந்தியாவிலே இருக்கிறதா ? ஆர்.எஸ்.எஸ்-ஐ விட ஒரு தேசவிரோத அமைப்பு இந்தியாவில் இருக்கிறதா? ஆர்எஸ்எஸ் ஐ விட தீவிரவாத அமைப்பு இந்தியாவில் இருக்கிறதா?

நான் மோடியை பார்த்த கேட்கிறேன், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பார்த்து கேட்கிறேன், இப்படி நீதிமன்றத்திலே பயங்கரவாத குண்டு வெடிப்பிற்கு காரணம் நாங்கள் தான் என்று ஒரு அமைப்பு பிரமாண வாக்குமூலத்தை தாக்கல் செய்த பிறகு, நீங்கள் முதன் முதலில் இந்த நாட்டில் அமைதியை பாதுகாக்க வேண்டுமானால், ஆர்எஸ்எஸ்ஐ அல்லவா தடை செய்திருக்க வேண்டும்.

பாபர் மசூதியில் சொன்ன மாதிரி ஒரு தீர்ப்பு இது சொன்னால் வைத்துக் கொள்ளுங்கள்… இடித்தது தப்புதான். அதனால்  இடித்தவர்களிடமே கொடுத்திடுவோம் என்றார் இது தீர்ப்பா? நாட்டில் கட்டப்பஞ்சாயத்து நடத்துபவர்கள் கூட நன்றாக தீர்ப்பு சொல்வார்கள், உச்சநீதிமன்ற தீர்ப்பை விட….  நாளைக்கு இதே போல ஒரு தீர்ப்பு அந்த வழக்கிலே வரும் என்று சொன்னால், அருமை நண்பர்களே எழுதி வைத்துக் கொள்ளுங்கள்…

தமிழகத்தில் இருக்கின்ற ஒரு தேவாலயம் கூட பாக்கி இருக்காது, தமிழகத்தில் இருக்கின்ற ஒரு மசூதி கூட பாக்கி இருக்காது. இன்றைக்கு மதச்சார்பற்ற நாடு என்பதை எடு என்கிறார்கள், மதசார்பற்ற நாடு என்று எடுத்துவிட்டால், இது இந்து நாடு என்று பிரகடனப்படுத்த மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் ?

இது இந்துக்களுக்கு சொந்தமான நாடு என்று பிரகட படுத்த மாட்டார்கள் என்பதற்கு என்ன விதிவிலக்கு இருக்கிறது. ஆகவே படிப்படியாக இன்றைக்கு இந்திய நாட்டை ஒரு இந்து நாடாக மாற்றுகின்ற ஒரு பேராபத்து இந்த நாட்டில் இருக்கிறது என எச்சரித்தார்.

Categories

Tech |