Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒருவர் கூட கட்சியில் இல்லை..! ஆனால் நடந்ததோ வேற… தஞ்சையில் தரமான சம்பவம் செய்த சீமான் கட்சி …!!

நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த நிகழ்வில் பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், யாரு என்ன பேசினாலும் அதைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை, ஏனென்றால் அவர்கள் எல்லாம் என்ன பேசி இருக்கிறார்கள், அப்புறம் எப்படி செயல்பட்டு இருக்கிறார்கள் என்று நாம் பார்த்திருக்கிறோம். அதனால் தான் நாம் இந்த துணிந்த முடிவு, தனித்த முடிவு, நம் தலைவன் காட்டிய பாதை, அதன் தொடர்ச்சியான பயணம்.

நாம் பிறந்து விட்டோம்,  இறக்க போறோம். ஆனால் நம் வாழ்க்கையை அர்த்தப்படுத்த போராட வேண்டும், அர்த்தமுள்ள வாழ்க்கையாக மாற்றுவதற்கு நாம் போராட வேண்டும், அது ரொம்ப முதன்மையான செயல். மதவாதத்திற்கு எதிரானவர்கள், மதவாத சக்தியை ஒழிக்கணும் அதெல்லாம் பேசுகிறார்கள், ஆனால் அவர்கள் கொடி கொடுப்பதை இவர்கள் எதிர்ப்பதில்லை.

சொந்த பிள்ளை இந்த மண்ணின் பிள்ளைகள் நாம் கொடி கொடுப்பதை தடுக்கிறார்கள். நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு வாக்கு நிலையத்திலும், வாக்கு விழாத இடமும் இல்லை நாம் தமிழர் கட்சிக்கு, எல்லா இடதுலையும் ஓட்டு விழுந்திருக்கிறது. சில கிராமங்களில் நாம் தமிழர் கட்சியே இல்லை, நாம் தமிழர் கட்சி கிடையாது.

தஞ்சாவூரில் ஒரு கிராமத்தில் 900 வாக்குகளோ என்னமோ இருக்குது. அதில்  600-க்கும் மேற்பட்ட700க்கும் குறையாத வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு விழுந்தது . ஆனால் அந்த கிராமத்தில் கட்சியில் ஒருவர் கூட இல்லை. மக்கள் நம்மோடு பயணிக்க தயாராகி விட்டார்கள், நீங்கள் மக்கள் அருகில் செல்ல தயாராகுங்கள் அவ்வளவு தான் நீங்கள் செய்ய வேண்டியது என தெரிவித்தார்.

Categories

Tech |