செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, இவங்களுக்கெல்லாம் ஏன் ராமன் மேல கோபம். ஒரு பொண்டாட்டின்னு சொல்லிட்டாரு அப்படின்னு அவர் மேல கோபம். மத்தவங்க மேல கோபம் இல்லை இந்த திக, திமுககாரங்களுக்கு.. ராமர் மேல கோவம் ஏன்? ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் ன்னு சொல்லிட்டாரே. அந்த இல்லுகிறது சொல்லவில்லை என்றால் இவர்கள் ராமர் படத்தை எரிக்க மாட்டார்கள்.
அவ்ளோ கேவலமானவங்க. இவங்க ஒருத்தன் கூட யோக்கியமானவன் கிடையாது. எங்க ஊரு சுப வீரபாண்டியன் என்ன சொல்றாரு ? விபச்சாரத்துக்கு புது வார்த்தை கண்டுபிடிச்சிருக்காரு, திருமணம் கடந்த உறவு. அவ்வளவு கேவலமானவர்கள் இவங்க.. அதனால அந்த பாதையில் உள்ளவர்கள் மோடி விமர்சிப்பதே வன்மையாக கண்டிக்கத்தக்க விஷயம். அதோடு நான் ஒரு விஷயம் வலியுறுத்த விரும்புகிறேன்,
திருச்செந்துறை கிராமமே எங்களது என்கிறான். ஆதாரம் எங்கடானா ஆதாரம் தேவை இல்லை என்கிறான். இந்த சட்டம் எப்படி இருக்கு? நாளைக்கு திடீர்னு இந்த ஊடக நண்பர்கள் உங்க வீடு, மன, நிலம் எல்லாம் என்னது வக்போர்ட் சொல்லிட்டானு வைங்க நீங்க கோர்ட்டுக்கு போக முடியாது, அவர்கள் சொல்லும் அமைப்பிடம் தான் போகணும். அங்கு ஜட்ஜ் யாரு ? முஸ்லிம். வக்கீல் யாரு முஸ்லிம்? தீர்ப்பு சொல்றவன் முஸ்லிம்.
ஆகவே இந்த நாட்டில் இந்துக்களின் சொத்துக்களை அபகரித்து, அடித்து விரட்டுவதற்காக திருச்செந்துறைல ஆரம்பிச்சிருக்காங்க. 389 ஏக்கர் இல்ல 389 ஸ்கொயர் இன்ச் நிலம் கூட இவர்களுக்கு கிடையாது, கிடைக்காது. அதை உறுதிப்படுத்துவதற்காக தான் நாம ஒன்றாக இணைந்து இப்பொழுது இந்த மோசமான அச்சுறுத்தலை நீக்க வேண்டும். அப்படின்னு களத்துல இறங்கி இருக்கிறோம் என தெரிவித்தார்.