அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. அதனால் ஏற்படக்கூடிய ஒவ்வொரு மரணத்திற்கும் எடப்பாடி பழனிச்சாமி தான் பொறுப்பு என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு,
மா. சுப்பிரமணியன் சொன்னதை நான் மறுக்கிறேன். முழுக்க முழுக்க நீட் தேர்வு வருவதற்கு காரணமே திராவிட முன்னேற்றக் கழகம். புள்ளி விவரத்தோடு சொல்கிறேன். 2010ல் இந்த நீட் தேர்வு வருவதற்கு காரணமாக இருக்கிறார்கள். வந்த பிறகு இவர்கள் ஆட்சி எத்தனை மாதம் இருந்தது? நான்கு மாதம்தான் இருந்தது. 2011இல் தேர்தல் வந்துருது. தேர்தலை நாங்கள் சந்தித்து வெற்றி பெற்றோம்.
அம்மா இரண்டு ஆண்டுகள் விதிவிலக்கு கேட்டார்கள், கொடுத்ததன் அடிப்படையில் நடந்தது. அதன் பிறகு உச்ச நீதிமன்றத்திற்கு போனார்கள், உச்சநீதிமன்றத்திற்கு நீட் தேர்வு வேண்டும் என்பவர்கள் போகிறார்கள். யார் மூலமாக செல்கிறார்கள்… காங்கிரஸ் இயக்கத்தினுடைய… அன்றைக்கு நிதி அமைச்சராக இருந்த பா. சிதம்பரத்தினுடைய மனைவி நளினி சிதம்பரத்தோடு போய், உச்சநீதிமன்றத்தில் வாதாடி, இந்த நீட் கட்டாயம் வேண்டும், இதன் மூலம் தான் பயன்பட முடியும்.
தமிழ்நாட்டு மக்கள் ஏழை, எளிய, மக்கள் பயன்படுவார்கள் என்று சொல்லி வாதாடி, தீர்ப்பை பெற்றவர் நளினி சிதம்பரம். அன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் என்ன செய்தது ? நான் கேட்கிறேன், இன்றைக்கு காங்கிரஸ் கட்சியை கூட வைத்திருக்கிறீர்கள், நீங்கள் தானே உருவாக்குனீர்கள், நீட் தேர்வு வருவதற்கு இந்த அரசாங்கம் தான் காரணம். திராவிட முன்னேற்றக் கழகம் தான் காரணம் என்று குற்றம் சாட்டுறேன்.
எங்கள் ஆட்சி என்பது தவறு, எங்கள் ஆட்சியிலும் நாங்கள் முயற்சி செய்தோம். இதைத்தான் நாங்களும் பலமுறை சொன்னோம், எங்கள் முதலமைச்சரும் சொன்னார் அன்றைக்கு இருந்த முதலமைச்சர், இன்றைக்கு இருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் சொன்னார். நீட் தேர்வுக்கு நாங்கள் எல்லா வகையான முயற்சியும் செய்திருக்கிறோம், நீங்களும் செய்யுங்கள், நாங்கள் உதவி செய்கிறோம், முயற்சிக்கிறோம் என்று சொன்னோம்.
ஆனால் அவர்கள் என்ன சொன்னார்கள் ? ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து, நீட் தேர்வு ரத்து என்று சொன்னார்களா? இல்லையா ?முதலமைச்சராக இருக்கின்ற, அன்று எதிர்கட்சி தலைவராக இருந்தவரும் சொன்னார், உதயநிதி சொன்னார், கனிமொழி சொன்னார், எல்லோரும் சொன்னார்கள். உங்களுக்கே தெரியும். இன்றைக்கு செய்துவிட்டார்களா? வருடம் இரண்டாகப் போகிறது. இதனால் தான் நீட் தேர்வில் மாணவர்கள் பாதிப்படைந்ததற்கு காரணம் என்று நினைக்கிறேன் என விளக்கினார்.