Categories
உலக செய்திகள்

அமெரிக்கா ஷாக்…! ”உள்ளே நுழையக் கூடாது” சீனா திமிர் பேச்சு …..!!

வூஹானுக்கு சென்று அமெரிக்க குழு ஆய்வு நடத்த டிரம்ப்  கோரிக்கை விடுத்ததை சீன அரசு நிராகரித்துள்ளது

சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதிலும் பரவி 200க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ளது. வூஹானில்  இருக்கும் ஆய்வு கூடத்தில் இருந்து வைரஸ் பரவியதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என டிரம்ப் கூறினார். அவரது கருத்திற்கு பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜெங் ஷுவாங் கூறியிருப்பதாவது, “வைரஸ் அனைத்து மனிதர்களுக்குமே பொது எதிரி, தொற்று பரவ தொடங்கியதிலிருந்து சீனா கடினமான நடவடிக்கைகளை வெளிப்படையாகவும் பொறுப்பான முறையிலும் எடுத்துள்ளது.

வைரஸை கட்டுப்படுத்துவதற்கு சீனா எடுத்த முயற்சிகள் மற்ற நாடுகளில் நோய் பரவுவதை தடுக்க சர்வதேச சமூகத்திற்கு மதிப்பு நிறைந்த அனுபவத்தை கொடுத்துள்ளது. இது எங்கள் பங்களிப்பின் முக்கிய பகுதி ஆகும். இதனை செய்ததற்கு சர்வதேச சமூகமும் பாராட்டு தெரிவித்துள்ளது. உலகில் ஏற்பட்ட பல மரணங்களுக்கு சீனா மீது வழக்குத் தொடுக்க வேண்டும் என அமெரிக்கா அரசியல்வாதிகளின் கூற்றிற்கு எந்த ஒரு முன்னுரிமை இருப்பதாகவும் எனக்கு நினைவில் இல்லை” எனக் கூறியுள்ளார்.சீனாவில் தொடங்கிய கொரோனா குறித்து அமெரிக்க குழு சென்று விசாரணை நடத்த டிரம்ப் வைத்த கோரிக்கையை சீனா நிராகரித்துள்ளது

Categories

Tech |