மகாராஷ்டிராவில் இ பாஸ் இல்லாமல் மக்கள் 2 கிமீ தாண்டி செல்ல கூடாது என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் இன்று வரை அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஆறாவது கட்டமாக நாளை முதல் ஜூலை 31ஆம் தேதி வரை பாதிப்பு அதிகம் உள்ள பல மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்பட உள்ளது.
அந்த வகையில், பாதிப்பு அதிகரித்து வரும் மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் இரண்டு கிலோமீட்டர் தூரத்தை தாண்டி இ பாஸ் இல்லாமல் மக்கள் யாரும் வாகனத்தில் செல்லக்கூடாது என்றும், மீறிச் சென்றால் அவர்களது வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக இதுபோன்ற பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் தொடர்ந்து ஜூலை 31 வரை மேற்கொள்ளப்படும் எனவும், மக்களும் முழு ஒத்துழைப்பு அளித்து அதற்கான பணியை மேற்கொள்ள உதவுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.