மேற்கு வங்கத்தில் இருக்கும் கிராமங்களில் தொலைக்காட்சி பார்ப்பதற்கும் கேம் விளையாடுவதற்கு தடை விதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதும் பலர் வீட்டில் முடங்கி இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது செல்போனில் கேம் விளையாடுவதும் அதிகரித்துள்ளது. இத்தகைய பழக்க வழக்கம் இளைஞர்களையும் சிறுவர்களையும் அதிக அளவு பாதிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் உள்ள சில கிராமங்களில் தொலைக்காட்சி பார்ப்பதற்கும் செல்போனில் கேம் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அதனை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனையும் வழங்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இத்தகைய விதிமுறை பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் இருக்கும் அத்வைத் நகர், வசாய் பய்கார் உள்ளிட்ட சில கிராமங்களில் இந்த புதிய விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை சரியாக பின்பற்றுகின்றனர் என்பதை கண்காணிக்க தனியாக செயல்படும் சமாஜ் சன்ஸ்கார் அழைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. செல்போன்களை பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதில் பாட்டு கேட்டாலோ கேம் விளையாடினால் அபராதம் வசூலிக்கப்படும்.
அதேபோன்று மது வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் இருக்கும் தடை விதித்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. முதல் முறை தடையை மீறினால் பஞ்சாயத்தில் தோப்புக்கரணம் போட வேண்டும் என்றும், மீண்டும் தவறு செய்தால் அபராதத்துடன் சில தண்டனைகள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதோடு அபராதமாக வசூலிக்கப்படும் பணம் கிராமத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படும் என்றும் இத்தகைய கட்டுப்பாடுகள் கிராமங்களில் அவசியம் தேவை என்றும் சமாஜ் சன்ஸ்கார் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.