தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதுயடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவரையொருவர் குறைகூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. ஒவ்வொரு கட்சியிலும் தொகுதி பங்கிடுவதில் இழுபறியும், கூட்டணி குறித்த குழப்பமும் நீட்டித்து வருகின்றது. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை வெளியிட்டு வருகின்றது.
இந்நிலை நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதில் 117 ஆண் வேட்பாளர்களும், 117 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதையடுத்து கொளத்தூர் தொகுதியில் மு.க ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடாடது குறித்து சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இது குறித்து கூறிய அவர் அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து போராட வேண்டி இருப்பதால் திருவொற்றியூரில் போட்டிருக்கிறேன் என்று பதிலளித்துள்ளார். வாக்குகளை விட நாடு தான் முக்கியம் என்று கருதுவதால் பிரச்சினையை மக்களிடம் பேச களமிறங்குகிறேன் என்று கூறியுள்ளார்.