நாமக்கல் மாவட்டத்தில் குடும்ப தகராறு காரமாக மனமுடைந்த ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள இருக்கும் செஞ்சுடையாம்பாளையத்தில் கணேசன்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ ஓட்டி வரும் இவருக்கு கவிதா(42) என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். தற்போது கொரோனாவினால் போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் கணேசன் குடித்துவிட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனையடுத்து கணேசன் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் விரக்தியடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து மயக்கமடைந்த நிலையில் இருந்த கணேசனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்த உடனடியாக பரமத்தி வேலூர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் கணேசன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து பரமத்திவேலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.