திமுகவின் இலக்கிய அணி சார்பில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சி அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, இவனுக்கு ஓட்டு உரிமை கொடுத்து, பதவி கொடுத்து, ஒரு காலத்துல சென்னை கார்ப்பரேஷன் உடைய கவுன்சிலர் யார் இருந்தார் ? ராஜா ஸ்ரீ முத்துவேல் செட்டியார் இருந்தார், யூ கிருஷ்ணாராவ் இருந்தார், தராசாரி என்று இருந்தார். இன்றைக்கு ஏழுமலையையும், குப்பனும், சுப்பனும், முனியனும் உட்கார்ந்திருக்கிறார்கள் என்றால்,
அந்த சமதர்மத்தை நாட்டிலே கொண்டு வந்த இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை மறந்து விடக்கூடாது. பத்திரிக்கையிலே படித்தேன். இங்கு ஆர்ப்பாட்டம் செய்யப் போகிறார்கள், மறியல் செய்யப் போகிறார்கள், முழு அடைப்பு என்று சொல்கிறார்கள். இங்கே பாரு, இங்கே எவனும் ஒரு பிராமணன் கூட வரமாட்டான். நம்ம ஜாதி இருக்கிறான் பாரு…
எவனை சூத்திரன் என்று சொன்னானோ, எவனை கேவலமாக பேசினானோ, அவன் தான் அத்தனை பேரும் போய் நின்னுகிட்டு போராட்டம் நடத்த போறாங்க. ஆகவே இலக்கிய அணி இனி அரசியல் பேசாதீங்க. முழுக்க, முழுக்க இந்த அணி இனிமேல் பகுத்தறிவு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதற்காக அமைய வேண்டும் என்பதை நான் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.