நடிகர் சூர்யா மற்றும் நடிகை ராதிகா மேக்கப் இல்லாமல் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யா தற்போது வாடிவாசல், ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் சூர்யாவும் பிரபல நடிகை ராதிகாவும் ஒன்றாக சேர்ந்து சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகை ராதிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் சூர்யாவும், நடிகை ராதிகாவும் ஒன்றாக ஒர்க்அவுட் செய்வது காப்பி அருந்துவது போன்றவற்றை செய்வார்கள். இந்த புகைப்படங்களையும் அவர்கள் அப்போதுதான் எடுத்துள்ளார்கள் என்று தெரிகிறது. குறிப்பாக இந்த புகைப்படங்களில் அவர்கள் இருவருமே மேக்கப் இல்லாமல் இருக்கின்றனர்.
Morning coffee, workout amd chat with the handsome @Suriya_offl ,perfect morning ❤️❤️ pic.twitter.com/WQr177udBd
— Radikaa Sarathkumar (@realradikaa) August 11, 2021