Categories
உலக செய்திகள்

ரூ.0கூட இல்லை….!! ”ஆடி போன USA” நொறுங்கிய வர்த்தகம் – உலகிற்கே ஷாக் ….!!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது உலக நாடுகளை உலுக்கியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருவதால் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர்.

உலகளவில் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 2,475,440க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, 170,069க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 789,383க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 42,303க்கும் அதிக எண்ணிக்கையில் இறந்துள்ளனர்.

கொரோனா தாக்கத்தால் ஒட்டுமொத்த உலக பொருளாதாரமும் சிதைந்துள்ளது. மக்கள் அனைவரும் வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கி கிடைப்பதால் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகளை பெரும் அவதிக்குள்ளாக்கிய கொரோனா வைரஸ் அமெரிக்க பொருளாதாரத்தை சுக்குநூறாக சிதைத்துள்ளது.

நேற்று ( திங்கள்கிழமை ) அமெரிக்காவின் பங்குசந்தையில் அமெரிக்க கச்சா எண்ணெயின் வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. உலக வரலாற்றில் கச்சா எண்ணெய்க்கு இதுவரை ஏற்படாத ஒரு நிலையில் அமெரிக்காவில் ஏற்பட்டது. அமெரிக்காவின் டபிள்யு.டி.ஐ., எனப்படும் வெஸ்ட் டெக்ஸாஸ் இண்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் ஒரு பேரல் -39.14 டாலருக்கு விற்பனையானது. அதே போல அங்குள்ள (Brent) பிரெண்ட் கச்சா எண்ணெய்யின் விலையும் கடும் வீழ்ச்சியை சந்தித்தது.

கச்சா எண்ணெய் ஒரு பேரல் -39.14க்கு விற்பனையானது என்பது இந்திய மதிப்பிற்கு ரூ.0க்கும் கீழ் . அதாவது நம்மிடம் பணத்தை  வாங்கி கொண்டு கச்சா எண்ணெய் கொடுப்பதற்கு மாறாக, கச்சா எண்ணெய் கொடுத்து கையில் பணமும் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது உலக வர்த்தகத்தை கடுமையாக சிதைக்கும் என்பதால் உலக நாடுகள் மிரண்டுள்ளன. உலக வரலாற்றில் கச்சா எண்ணெய் இப்படி ஒரு சரிவை கண்டதில்லை.

உலகளவில் ஊரடங்கு அமலில் இருப்பதில் போக்குவரத்து உட்பட அனைத்து சேவைகளும் முடங்கியுள்ளது. அனைத்து நாடுகளிலும் அத்தியாவசிய சேவைகள் மட்டும் நடைபெறுவதால் கச்சா எண்ணெய் தேவை பெருமளவில் குறைந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் வாங்க யாரும் இல்லாமல் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

தேக்கமும் அதிகரிக்க அதிகரிக்க தேங்கிய கச்சா எண்ணெய்யை சேமித்து வைக்க இடம் இல்லாமல் செல்லவே தற்போது இப்படி ஒரு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்ற பலரும் #OilCrash, #OilPrice, #CrudeOil, #USOIL,என்ற ஹாஷ்டாக்கில் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது தற்போது உலகளவில் ட்ரெண்டாகி வருகின்றது.

 

Categories

Tech |