தாசில்தார் மாவட்ட அலுவலகத்தில் உலகிலேயே இல்லாத தேதியில் பிறப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் தாசில்தார் அலுவலகத்தில் உலகிலேயே இல்லாத ஒரு தேதியைக் குறிப்பிட்டு இறப்பு சான்றிதழ் வழங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிகர் முரளிக்கு வாங்கிய கடனை எப்போது தருவாய் என்று கடன்காரர் கேட்க வரும்போது பிப்ரவரி 30 ஆம் தேதி தருகிறோம் என்று கூறுவார்கள். அதேபோல விருதுநகர் மாவட்டம் செய்யம்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி அழகர்சாமி. இவர் 2000ஆம் ஆண்டு இறந்துள்ளார்.
இதையடுத்து அழகர்சாமியின் இளையமகன் உதயகுமார் கடன் வாங்குவதற்காக தனியார் வங்கியின் உதவியை நாடியுள்ளார். அப்போது வங்கி அதிகாரிகள் அவரிடம் வாரிசுசான்றிதழ் கேட்டுள்ளனர். இதனை தொடர்ந்து உதயகுமாரும் வங்கி அதிகாரிகளிடம் வாரிசு சான்றிதழ் வழங்கியுள்ளார்.அதை அதிகாரிகள் சரிபார்த்தபோது உதய குமாரின் தந்தை அழகர்சாமி இறந்த தேதி 30. 2. 2000 என்று குறிப்பிடப்பட்டிருந்துள்ளது.
இதனை பார்த்த வங்கி அதிகாரிகள் உதயகுமாருக்கு கடன் தர மறுத்துள்ளனர். வாரிசுசான்றிதழ் மட்டும் அல்ல, அழகர்சாமியின் பிறப்பு சான்றிதழில் கூட அவர் இறந்த தேதி தவறாக குறிப்பிடப்பட்டிருந்துள்ளது. இதனை தொடர்ந்து உதயகுமார் தாசில்தார் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதிகாரிகள் உதய குமாரின் தந்தை அழகர்சாமியின் இறப்பு சான்றிதழ் விரைவில் மாற்றித் தரப்படும் என்று கூறியுள்ளனர். உலகிலேயே இல்லாத ஒரு தேதியை குறிப்பிட்டு இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் விருதுநகர் பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.