வாட்ஸ்அப் மூலமாக உங்களுடைய நண்பர்களுக்கு பணத்தை அனுப்புவது எப்படி என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
இன்றைய பல கட்டத்தில் அனைவருமே ஸ்மார்ட்போன் வைத்திருக்கின்றனர். மேலும் ஆன்லைன் பண பரிவர்த்தனையை செய்யும் செயலிகளை பயன்படுத்துகின்றனர். இதற்காகவே கூகுள்-பே, பேடிஎம் போன்ற நிறைய செயலிகள் உள்ளன. இதற்காக ஒரு செயலியை வைத்திருப்பதை விட ஏற்கனவே இருக்கும் வாட்ஸ்அப் மூலமாக பணத்தை அனுப்புவது எளிதாக இருக்கும். அண்மையில் தான் வாட்ஸ் அப் மூலமாக பணத்தை அனுப்பும் வசதி வந்ததும்.
மூலமாக வாட்ஸ் அப்பில் உள்ளவர்களுக்கு பணத்தை அனுப்ப உங்கள் காண்டக்ட்டில் உள்ளவர்களுக்கு முதலில் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்.
யாருக்கு பணத்தை அனுப்ப வேண்டுமோ அவர்களின் காண்டக்ட்டை ஓபன் செய்து அதில் அட்டாச்மென்ட் வசதி என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் வங்கிக் கணக்கு விவரங்கள் மாற்று யுபிஐ விவரங்களை சரி செய்த பிறகு நீங்கள் பணத்தை அனுப்பலாம்.
வங்கியில் இணைக்கப்பட்ட செல்போன் நம்பர் உங்கள் செல்போனில் இருக்க வேண்டும். அதில் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்ட பிறகு உங்கள் வங்கிக்கணக்கு விவரங்கள் சரிசெய்யப்படும்.
இதையடுத்து உங்கள் காண்டக்ட்டில் உள்ளவர்களுக்கு பணம் அனுப்பிக் கொள்ளலாம்.
ரிஜிஸ்டர் செய்யும் போது கவனத்தில் வைக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் உங்களுடைய ஆன்லைன் பேங்கிங், டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்ட் விவரங்களை கொடுக்க வேண்டாம். ஏனென்றால் ஆன்லைன் பண மோசடிகள் இப்போது அதிகமாக நடக்கின்றன.