ஆஸ்திரேலியா புதர் தீக்கு எதிரொலியாக தமது இந்திய பயணத்தை ரத்து செய்ய இருப்பதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களில் புதர் பற்றி எரிந்து வரும் சூழலில் நாட்டை விட்டு செல்வது பொருத்தமானதாக இருக்காது என்ற விமர்சனம் எழுந்த நிலையில், இம்மாதம் 13-ம் தேதி இந்தியா வரும் திட்டத்தை ரத்து செய்துள்ளார் ஆஸ்திரேலியா பிரதமர்.
ஏற்கனவே இம்மாதிரியான ஒரு பிரச்சினை ஆஸ்திரேலியாவில் நிலவிய பொழுது அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மாரிசன் குடும்பத்தினருடன் விடுமுறைக்காக ஹவாய் தீவுக்கு சென்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.