Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இப்பவே கட்டுடா…… மாலை… தாலியுடன்….. காதலர்களை துரத்திய இந்து முன்னணி…… நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லை அருகே நல்ல காதலை ஆதரிப்பதாக கூறி மாலை தாலியுடன் ஆங்காங்கே காதலர்களை இந்து முன்னணியினர் விரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் நேற்றைய தினம் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வந்தது. இந்த நாளில் தனது மனதுக்குப் பிடித்தவர்களுடன் காதலை வெளிப்படுத்தி கொண்டாடி வருவார்கள். அந்த வகையில், இதற்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவையும், எதிர்ப்பையும் அளித்து வருகின்றனர்.

நேற்றைய தினம் திருநெல்வேலி மாவட்டத்தில் காதலர் தினத்தை ஆதரித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்களும் ஆங்காங்கே பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் புறாக்களை பறக்க விட்டும் கொண்டாடினர். மறுபுறம் முறையற்ற காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நல்ல காதலை ஆதரித்து  இந்து முன்னணி கட்சியை சேர்ந்தவர்கள் ஆங்காங்கே தாலிக்கயிறுடன் வலம் வந்து கொண்டிருந்தனர். அந்தவகையில்,

நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் அதிக அளவில் காதலர்கள் வருவார்கள் என்பதை அறிந்து அங்கே மாலை தாலியுடன் சென்று காதலர்களுக்காக காத்திருந்தனர். ஆனால் அவர்களை கண்டதும் பயந்து காதலர்கள் பயந்து ஓடியதால் மாலை தாலியை வாங்காத விரக்தியில் முறையற்ற காதலை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |