செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாண்புமிகு டிஜிபி அவர்கள் யாரெல்லாம் இது போன்ற வன்முறையில் ஈடுபடுகின்றார்களோ, சட்ட ஒழுங்கை சீர்குலைக்கின்றார்களோ, அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயப்படும் என்று சொல்லி இருக்கின்றார்கள். நிச்சயமாக வரவேற்கின்றேன். யாரெல்லாம் இது போன்ற சட்ட ஒழுங்கு சீர்கேட்டிலே பொதுமக்களுடைய சொத்தை சேதப்படுத்துகின்றார்களோ, ஒரு அமைதி பூங்காவாக இருந்த தமிழகம் 15 மாதங்களாகவே நாம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றோம்.
காவல்துறையினுடைய கைகளை கட்டப்பட்டிருக்கின்றது, அதனால் அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்று… அதனுடைய உச்சம் இப்போது தொட்டு இருக்கிறது. பி எஃப் ஐ 11 நபர்கள் கைதுக்கு பிறகு… அதனால் நம்முடைய டிஜிபி அவர்கள் இன்னும் விரைந்து முன் ஜாக்கிரதையின் நடவடிக்கையாக குண்டர்கள் யார் இருக்கிறார்களோ, அவர்களையும் கண்டறிந்து சிறையில் அடைப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
ஏனென்றால் சொல் என்பது செயலில் இருக்க வேண்டும். நம் மாநில முதலமைச்சர் அவர்களுக்கு மிக தெளிவாக சொல்லி இருந்தோம். முதலமைச்சர் என்பது அனைவருக்கும் முதலமைச்சர் அவர்கள். சத்திய பிரமாணம் அனைவருக்கும் எடுத்து இருக்கின்றார்கள். ஆனால் அவருடைய நடவடிக்கை என்பது கடந்த இரண்டு மூன்று நாட்களாக திருப்தி கொடுப்பதாக இல்லை என்பதையும் கூட, மிகத் தெளிவாக சொல்லி இருந்தோம்.
உள்துறை அமைச்சருக்கு நம்முடைய கடிதம் அங்கே அனுப்பப்பட்டு இருக்கிறது. நானும் உள்துறை அமைச்சருக்கு தொலைபேசி மூலமாக மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களிடம் பேசினேன், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார். அதன் நிச்சயமாக நடக்கும் என்கின்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. அதே நேரத்தில் நம்முடைய தொண்டர்களுக்கு மறுபடியும் வலியுறுத்துகின்றோம் என தெரிவித்தார்.