Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வழக்கு இல்ல…. தப்பும் பண்ணல….. உன் இஷ்டத்துக்கு தூக்கிட்டு போய் அடிப்பியோ….. போலீசை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்….!!

விருதுநகர் அருகே வாலிபரை தாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஊர்மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணை கிராமத்தில் நேற்றையதினம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வாகனத்தில் வந்த சிவானந்தம் என்ற நபரை காவல்துறையினர்  வழிமறைத்த போதிலும் அவர் நிற்காமல் சென்ற காரணத்தினால், அவரை விரட்டி பிடித்து காவல் நிலையம் தூக்கிச்சென்று கொடூரமாக அடித்து துன்புறுத்தி உள்ளனர்.

இதில் மிக படுகாயமடைந்த அவர் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த தகவல் அறிந்ததும், சிவானந்தத்தின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஏழாயிரம்பண்ணை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிவானந்தத்தை தாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,

அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அப்பகுதி எம்எல்ஏ மற்றும் காவல்துறை அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தபின் அவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது. 

Categories

Tech |