ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என மனைவி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்துள்ள காக்கூர் அருகே உள்ள புளியங்குடியில் குமரவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சண்முகவள்ளி. இந்நிலையில் குமரவேல் துபாயில் ஒரு நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 26ஆம் தேதி குமரவேல் உயிரிழந்துவிட்டார் என அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளார். ஆனால் அவர் எப்படி உயிரிழந்தார் என்று எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை.
இதுகுறித்து அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தில் கேட்டபோதும் அவர்களும் பதிலளிக்கவில்லை. இந்நிலையில் குமரவேல் மனைவி சண்முகவள்ளி மற்றும் அவரது மகன் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர். அதில் எனது கணவர் எப்படி உயிரிழந்தார் என்பதை கண்டுபிடிக்குமாறும், அவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த மனுவை மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.