Categories
சினிமா தமிழ் சினிமா

எதுவும் அஜித்தை தடுக்க முடியாது… பிரபல தயாரிப்பாளர் ட்விட்…!!!

நடிகர் அஜித்தை எதுவும் தடுக்க முடியாது என பிரபல தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜீத் தற்போது ஹெச்.வினோத் கூட்டணியில் வலிமை எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதேபோல் அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தையும் போனி கபூர் தயாரிப்பில் தான் நடித்து இருந்தார். இதை தொடர்ந்து அடுத்ததாக அஜித் நடிக்கும் படத்தையும் போனிகபூர் தான் தயாரிக்க இருக்கிறார்.

நடிகர் அஜித் ஒரே தயாரிப்பாளர் படத்தில் தொடர்ந்து மூன்று முறை நடித்திருப்பது இதுவே முதல் முறையாக கருதப்படுகிறது.மேலும் இவர்களது கூட்டணியில் தற்போது உருவாகியுள்ள வலிமை படத்தின் போஸ்டரும், டீசரும் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீஸாக உள்ள இப்படத்தை காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில் நடிகர் அஜீத் சமீபத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை வரை பைக்கிலேயே பயணித்து போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலான நிலையில், அதில் சில புகைப்படங்களை பகிர்ந்த போனி கபூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, “தனது கனவில் வாழ்வதிலிருந்தும், ஒவ்வொரு கனவையும் நிறைவேற்றுவதிலிருந்தும் எதுவும் அவரைத் தடுக்க முடியாது. உலகம் முழுவதும் விரும்பப்படுகிறார் அஜித்குமார் என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |