Categories
தேசிய செய்திகள்

Nothing Ear-1 ஆர்டர் செய்தவருக்கு…. “கிடைச்சது காலி டப்பா”… ஃபிளிப்கார்ட்டின் செயலால் கோபமான நடிகர்…!!!

Nothing Ear-1 ஆர்டர் செய்தவருக்கு காலி டப்பாவை அனுப்பி வைத்துள்ளது பிளிப்கார்ட் நிறுவனம்.

நாக்பூரைச் சேர்ந்த டிவி நடிகர் பாராஸ் கல்னாவாத் சமீபத்தில் ஃபிளிப்கார்ட் ஆப்பில் Nothing Ear-1 என்ற ஹெட்போனை ஆர்டர் செய்திருந்தார். பின்னர் சில நாட்கள் கழித்து அவருக்கு பார்சல் வந்தது. அந்த பார்சலை பிரித்து பார்த்த பாராஸ் கல்னாவாத் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில் அந்த பார்சலில் ஒன்னும் இல்லாமல் காலி டப்பாவாக இருந்தது.

https://twitter.com/paras_kalnawat/status/1448163886398590977

இதையடுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஃபிளிப்கார்ட், நத்திங்க் பாக்ஸ் ஆகிய நிறுவனங்களை டேக் செய்து காலி டப்பாவின் புகைப்படத்தை அதில் பதிவிட்டிருந்தார். இந்த ட்வீட் வைரலான நிலையில் தற்போது பிளிப்கார்ட் நிறுவனம் பதிலளித்துள்ளது. அதில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

Categories

Tech |