Categories
மாநில செய்திகள்

எங்கள் கையில் ஏதுமில்லை….! எல்லாமே ஆளுநர் முடிவு… பேரறிவாளன் விடுதலையில் மத்திய அரசு தகவல் ..!!

பேரறிவாளன் விடுதலை குறித்து ஆளுநர் தான் முடிவு எடுப்பார் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு, பேரறிவாளனின் விடுதலையை குடியரசு தலைவர் தான் முடிவு செய்வார் என்று தெரிவித்தது. இதனையடுத்து இந்த வழக்கானது இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதில் பேரறிவாளன் விடுதலை குறித்து குடியரசுத் தலைவருக்கு, ஆளுநரே முடிவு செய்து சொல்வார் எனவும்,ஆளுநர் 3 அல்லது 4 நாட்களுக்குள் முடிவு எடுப்பார் என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். அதன் பிறகு இவ்வழக்கின் விசாரணை 4 வாரங்களுக்கு பிறகு ஒத்தி வைக்கப்பட்டது.

Categories

Tech |