கேரளாவில் இன்றும் புதிதாக யாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இன்று செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது, ” கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 499 என தெரிவித்தார். குறிப்பாக, அதில் தற்போது 34 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை கொரோனாவில் இருந்து சிகிச்சை பெற்று 461 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 42 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கொரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42,533 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,373 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 11,707 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 12,974 பேரும், குஜராத்தில் 5,428 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து டெல்லியில் 4,549 பேரும், மத்திய பிரதேசத்தில் 2,846 பேரும், தமிழகத்தில் 3,023 பேரும், ராஜஸ்தானில் 2,886 பேரும், உத்தரபிரதேசத்தில் 2,645 பேருக்கும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவின் கொடிய பாதிப்பில் இருந்து தப்பிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், கேரளாவில் எடுக்கப்பட்ட முன்னெச்சிக்கை நடவடிக்கைகள் மற்றும் சிறந்த திட்டமிடல், மக்களின் ஒத்துழைப்பு போன்றவற்றால் கொரோனா பாதிப்புகளின் விகிதம் குறைந்து வருகிறது. கொரோனாவில் இருந்து கேரளா மக்கள் மீண்டு வருவதை நினைத்து பெருமைப்பட்டாலும், இவர்கள் மட்டும் எப்படி கொரோனாவில் இருந்து தப்பித்து வருகின்றனர் என பிற அனைத்து மாநிலங்களும் வியந்து பார்க்கின்றனர்.