Categories
அரசியல் மாநில செய்திகள்

ரெய்டில் எதுவுமே கிடைக்கல… ஏமாந்து போன போலீசார்… கெத்தாக பேசிய எஸ்.பி வேலுமணி..!!

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, இன்று மூன்றாவது முறையாக தமிழக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் என் வீட்டில் ரெய்டு நடத்தி முடித்திருக்கிறார்கள். இன்றைக்கு தொடர்ந்து இந்த பழிவாங்குதல் நடவடிக்கையை ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார். இந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியை இதுபோல் எந்த தலைவர்களும் செய்ததில்லை. முதலமைச்சராக பலபேர் இருந்திருக்கிறார்கள்.

தொடர்ந்து காவல்துறையை இன்றைக்கு தவறான முறையிலே பயன்படுத்தி வருகின்றார். எந்த ஆதாரமும் இல்லாமல் இன்றைக்கு மூன்றாவது முறை ரெய்டு நடந்து முடிந்துள்ளது. இங்கே எதுவுமே எடுக்கல. என்னுடைய வீட்டில் வந்து பாத்தீங்களா வெறும் 7,500 பணம் தவிர எதுமே இல்ல.என்  அம்மாவுடைய ரூம்ல ஒரு சின்ன சின்ன வெள்ளி,  காதுல போடுற கம்மல் இந்த மாதிரி தான் இருந்ததே தவிர வேற எந்த ஆவணமும்  கைப்பற்றப்படவில்லை.

Categories

Tech |