மத்திய அரசு ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை தீபாவளி போனஸ் ஆக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. மத்திய ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர் அனுராக் தாகூர். இதன் மூலமாக 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு பலன் கிடைப்பதாக தெரிவித்தார். அத்துடன் மத்திய அரசு கேஸ் சிலிண்டரை மானிய விலையில் விற்பதற்காக 22,000 கோடி ரூபாயை மானியத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்துள்ளது. எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்த மானியத் தொகை பகிர்ந்து அளிக்கப்படும்.
தொடர்ந்து வீட்டில் உபயோகிக்கப்படும் எரிவாயு உருளையை சலுகை விலையை விற்பதற்காக இந்த மானியம் அளிக்கப்படுகிறது. இது தவிர கூட்டுறவு சங்கங்கள் தொடர்பான சட்டத்திலேயே திருத்தம் கொண்டு வரவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுவும் இன்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்திலே எடுக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலே நடந்த இந்த கூட்டத்திலே வடகிழக்கு மாநிலங்களுக்கு புதிய திட்டம் ஒன்றை அறிவிப்பதன் முடிவெடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு முக்கிய முடிவுகள் இன்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டு, தற்பொழுது அதற்கான அறிவிப்புகளை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் வெளியிட்டு இருக்கிறார்.