Categories
மாநில செய்திகள்

சிறுவனை காலணியை கழற்றுமாறு கூறிய விவகாரம் – எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதிலளிக்க நோட்டீஸ்..!!

பழங்குடியின சிறுவனை அழைத்து தனது காலணியை கழற்றுமாறு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறிய விவகாரத்தில், எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்குமாறு தமிழ்நாடு டி.ஜி.பி, தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு தேசிய பழங்குடியின நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நீலகிரி மாவட்டம், முதுமலை யானைகள் புத்துணர்வு முகாமை பார்வையிடுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அங்கு சென்றார். அப்போது அவர், அங்கிருந்த கோயிலுக்குச் செல்லும்போது பழங்குடியின சிறுவனை அழைத்து தனது காலணியை கழற்றுமாறு கூறினார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

அமைச்சரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில், இந்த விவகாரத்தை கையில் எடுத்த தேசிய பழங்குடியின நல ஆணையம், அமைச்சர் சீனிவாசன், சிறுவனை அழைத்து தனது காலணியை கழற்றச் சொன்ன விவகாரத்தில், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதில் அளிக்க தமிழ்நாடு டி.ஜி.பி மற்றும் தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், 15 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதிலளிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |