Categories
அரசியல்

ஓபிஎஸ் அணியினருக்கு நோட்டீஸ் – பின்னணி ….!!

அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்க கோரி சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பொறுப்பேற்ற பிறகு பிப்ரவரி 18 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அதில் இப்போது துணை முதல்வராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம் உள்பட 11 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இந்த நிலையில் 11 சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுக கொறடா உத்தரவை மீறி வாக்களித்தததால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று திமுகவினர் சபாநாயகரை , நீதிமன்றத்தை நாடினர். உச்சநீதிமன்றம் வரை இந்த வழக்கு சென்ற நிலையில் இதன் மீது சபாநாயகர் விரைவில் முடிவெடுப்பார் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில் சபாநாயகர் தனபால் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை நடைமுறையை படி பார்த்தல் சபாநாயகர் கொடுத்த நோட்டீசுக்கு  14 நாட்களுக்குள் நேரிலோ அல்லது கடிதம் வாயிலாக விளக்கத்தை அளிக்கலாம் என்ற ஒரு விஷயம்  நடைமுறையில் இருக்கிறது. இதனால் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |