தேனி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர், அரசு பொதுத்தேர்வில் 90 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி விகிதம் பெற்றுள்ள பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
இந்தாண்டு, பிளஸ் 2 தேர்வில், 92.54 சதவீதம் பெற்று 15வது இடத்திலும், பத்தாம் வகுப்பில் 93.5 சதவீத தேர்ச்சி பெற்று 25 வது இடத்திலும் தேனி மாவட்டம் உள்ளது . தேர்ச்சி சதவீதம் குறைந்தற்க்கு காரணம் கண்டறிய அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கூட்டம் அல்லிநகரத்தில் நடந்தது.
இக்கூட்டத்திற்கு முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து ,மாவட்ட கல்வி அலுவலர்கள் திருநாவுக்கரசு, கணேஷ்,திருப்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் தேர்ச்சி குறைந்ததற்கான காரணங்கள் குறித்து பேசப்பட்டது . மேலும் 90 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் , தலைமையாசிரியர்களும், 90 சதவீதத்திற்கு கீழ் பாடங்களில் தேர்ச்சி குறைந்த ஆசிரியர்களும் அதற்கான விளக்கம் தர வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.