Categories
உலக செய்திகள்

நேட்டோவுடனான நேரடி மோதல்…. உலகளாவிய பேரழிவு…. எச்சரிக்கை விடுத்த பிரபல நாட்டு அதிபர்….!!!

நேட்டோவுடனான நேரடி மோதல் உலகளாவிய பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கி 234 நாட்களாக நீடித்துக் கொண்டு வருகின்றது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் போன்ற உதவிகளை வழங்கி வருகின்றன. இதனை அடுத்து போரில் கைப்பற்றிய உக்ரைனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா மற்றும் கார்சன் ஆகிய 4 நகரங்களை ரஷ்யா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டுள்ளது. இதற்கிடையே, போரில் தற்போது உக்ரைன் இராணுவ படைகளின் ஆதிக்கம் சற்று அதிகரித்து வருகின்றது.

ரஷ்ய இராணுவ படைகள் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் மீட்டு வருகின்றது. இதனால், இரு தரப்புக்குமிடையே மோதல் அதிகரித்து உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்து வருகின்றது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்த போதும் போரின் போக்கு 3-ம் உலகப்போருக்கு வழிவகுக்கும் சூழ்நிலையை உருவாக்கி வருகின்றது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கஜகஸ்தான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ரஷ்யா – மத்திய ஆசிய நாடுகளுகிடையே நடைபெறும் மாநாட்டில் புதின் பங்கேற்கின்றார்.

மேலும் இம்மாநாட்டில் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் அதிபர்களும் பங்கேற்கின்றார். இதனை தொடர்ந்து கஜகஸ்தான் பயணத்தின் போது ரஷ்ய அதிபர் புதின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இது குறித்து அவர் பேசியதாவது, “ரஷ்யா – உக்ரைன் இடையேயான உறவில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து கூட்டாளிகள் கவலைபடுகின்றனர். இதில், எதிர்பாராதது எதுவும் இல்லை என்பது உண்மை. எங்களின் கண்ணோட்டம் குறித்து எங்கள் கூட்டாளிகளுக்கு நான் உரிய தகவல் கொடுத்து வருகின்றேன்.

ஆனால், அது ரஷ்யா அதன் கூட்டாளி நாடுகளுடன் கொண்டுள்ள மதிப்பு, நட்பின் ஆழத்தை பாதிக்காது. அனைத்து பிரச்சினைகளையும் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவேண்டுமென இந்தியா, சீனா கூறி வருகின்றன. மேலும் இந்தியாவும், சீனாவும் எங்கள் நெருங்கிய நட்பு நாடுகள், கூட்டாளிகள். அவர்களின் நிலைப்பாட்டை நாங்கள் மதிக்கின்றோம். ஆனால், உக்ரைனின் நிலைப்பாட்டையும் நாங்கள் அறிவோம். அவர்கள் பேச்சுவார்த்தை வேண்டும் என கூறுகின்றனர்.

ஆனால், பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்பதை அதிகாரப்பூர்வ முடிவாக எடுத்துள்ளனர். உக்ரைனை அழிப்பது எங்கள் நோக்கமல்ல. ரஷ்ய ராணுவத்துடன் நேட்டோ படைகளை போரிட நேரடியாக களமிறக்குவது மிகவும் ஆபத்தான நடவடிக்கை. இது உலகளாவிய பேரழிவுக்கு வழிவகுக்கும். இது குறித்து பேசுபவர்கள் ரஷ்ய படையுடன் நேட்டோவை நேரடியாக களமிறக்கும் முடிவை எடுக்கமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

 

Categories

Tech |