தமிழக மற்றும் கேரள மாநிலத்தில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. அதில் கேரளா மாநிலத்தில் வருகின்ற 2 ஆம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யக்கூடும். மேலும் மலையோர மாவட்டங்களில் கன மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், கொல்லம், திருச்சூர், இடுக்கி மற்றும் எர்ணாகுளம் ஆகிய 5 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே நாளை பத்தினம்திட்டா, கோட்டயம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களிலும், நாளை மறுநாள் வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் கேரள கடல் பகுதியில் பலத்த மழை பெய்ய கூடும். இதையடுத்து கடலோர காற்று வீசக் கூடும் என்பதால் கேரள மீனவர்கள் லட்சத்தீவு உள்ளிட்ட கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற 3ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல அரசு தடை விதித்துள்ளது.