சீக்கிய மதத்தை நிறுவியவரும் அதன் முதல் குருவுமான குருநானக்கின் பிறந்த தினத்தையொட்டி, இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் சீக்கிய யாத்ரீகர்கள் கா்தார்பூரில் உள்ள நான்கானா சாஹிப் குருத்வாராவுக்கு யாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்தப் பகுதி சுதந்திரத்துக்குப் பின்னர் பாகிஸ்தான் வசம் சென்றது. இதையடுத்து இந்த யாத்திரையை மேற்கொள்வதற்கு வசதி ஏற்படுத்தும் நோக்கில், பஞ்சாபின் குருதாஸ்பூா் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவிலிருந்து, பாகிஸ்தானின் கா்தார்பூர் குருத்வாரா வரை சாலை வழித்தடம் அமைக்கத் திட்டமிடப்பட்டது.
இதில், குருதாஸ்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை இந்தியா அமைத்துள்ளது. மறுபுறம் கா்தார்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை பாகிஸ்தானும் அமைத்துள்ளது.குருநானக்கின் 550ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, இந்த சாலை இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. இந்த நிகழ்வை நவம்பர் 9ஆம் தேதி (அதாவது இன்று) நடத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஏன் திட்டமிட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜெர்மனி நான்கு பகுதிகளாக பிரிந்தன. கிழக்கு, மேற்கு ஜெர்மனியை பிரிக்கும் வகையில் 1961ஆம் ஆண்டு சுவரொன்றும் எழுப்பப்பட்டது. இந்த சுவர் 1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் தேதி இடிக்கப்பட்டது.இது இருநாட்டுக்கும் இடையே சகோதரத்துவத்தை வலுப்படுத்தியது. இதனைபோல் இந்தியாவும்-பாகிஸ்தானும் நட்புப் பாராட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்த தேதியை தேர்ந்தெடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.