Categories
மாநில செய்திகள்

‘தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்’…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…. அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை….!!

அனைத்து பள்ளிக்கூடங்களிலும் திருப்புதல் தேர்வை நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் இந்த ஆண்டிற்கான பாடத்திட்டம் பாதியாக குறைக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது. மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களை பொது தேர்வுக்கு தயார்ப்படுத்தும் விதமாக மாதத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்த நிலையில் பள்ளிக்கூடங்களில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான திருப்புதல் தேர்வை நடத்தும்படி பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் IAS உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக இவரின் சார்பில் இணை இயக்குனரான கோபிதாஸ் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் இது தொடர்பான சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

Categories

Tech |