Categories
தேசிய செய்திகள்

“இனி இதெல்லாம் கட்டாயம்”… திருப்பதியில் மீண்டும் அமலாகும் கொரோனா கட்டுப்பாடுகள்… வெளியான அறிவிப்பு….!!!!

சீனாவில் உரு மாறிய பிஎப் 7 கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் இந்தியாவில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கொரானா கட்டுப்பாட்டு முறைகள் அமலுக்கு வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் தேவஸ்தான அதிகாரிகள் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதாவது திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் ஒவ்வொரு நாளும் பக்தர்களின் கூட்டம் அலைமோதும் நிலையில், அடுத்த வருடம் ஜனவரி மாதம் 2-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதில் 2.5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வதற்காக 300 ரூபாய் மதிப்பிலான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு 25,000 டிக்கெட்டுகள் வீதம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சர்வ தரிசன டோக்கன்களை திருப்பதியில் மட்டும் பெற்றுக் கொள்ளுமாறும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அலைமோதும் என்பதால் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது தேவஸ்தான அதிகாரிகளின் பொறுப்பு. இதன் காரணமாக ஜனவரி 1 முதல் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் இதை கட்டாயம் பக்தர்கள் பின்பற்ற வேண்டும் எனவும் தேவஸ்தான அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |