Categories
தேசிய செய்திகள்

இனி தபால் கணக்குகளுக்கு இ-பாஸ்புக் …. வாடிக்கையாளர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் தபால் துறை சார்பாக 9 வகையான சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த திட்டங்களில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பரிவர்த்தனைகளை பதிவு செய்வதற்கான பாஸ்புக் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாடிக்கையாளர்கள் அனைவரும் மொபைல் எண் மூலமாக எளிதில் பாஸ்புக்கை கையாளும் வகையில் இ பாஸ்புக் வசதியை தபால் துறை தற்போது அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலம் எந்த நேரமும் சேமிப்பு கணக்குகளின் இருப்புத்தொகை தபால் அலுவலக சேமிப்பு கணக்கின் முழுமையான பரிவர்த்தனை விவரங்கள் அனைத்தையும் வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ள முடியும். இந்திய தபால் துறையின் www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் இ பாஸ்புக் வசதிக்கான லிங்க் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |