Categories
தேசிய செய்திகள்

அடடே! இனி எல்லாமே ஈஸி தான்… இந்தியாவில் விரைவில் டிஜிட்டல் கரன்சி…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் டிஜிட்டல் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் டிஜிட்டல் ரூபாய் நோட்டுகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்காக டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இது போன்ற திட்டங்களை விரிவுபடுத்தும் போது அதன் சிறப்பு அம்சங்கள் மற்றும் நன்மைகள் குறித்து எடுத்துரைக்கப்படும். இ ரூபாய் என்பது தற்போது உள்ள பணத்திற்கு கூடுதல் விருப்ப தேர்வாக இருக்கும்.

இது வழக்கமான ரூபாய் நோட்டுகளை விட வேறுபட்டது அல்ல என்றாலும் பணப்பரிமாற்றத்திற்கு வேகமாகவும் எளிதாகவும் இருக்கும். டிஜிட்டல் கரன்சியானது ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ கரன்சியாக இருக்கும். இதனை பொதுமக்கள் முதல் நிறுவனங்கள் வரை அனைத்து தரிப்பினரும் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதனையடுத்து டிஜிட்டல் கரன்சிகளை வங்கியில் ரூபாய் நோட்டுகள் போன்று இருப்பு வைத்துக் கொள்ளலாம்.

இந்த டிஜிட்டல் கரன்சிகள் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது என்பதால் வங்கிகளில் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படும். மேலும் தற்போது புழக்கத்தில் இருக்கும் பணத்தை பரிவர்த்தனை செய்வதற்கு ஏற்படும் செலவை டிஜிட்டல் கரன்சி குறைக்கும். இந்த டிஜிட்டல் கரன்சியை உலக நாடுகள் எதிர்நோக்கி இருப்பதால் இந்தியாவிலும் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |