Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இனியாவது உஷார்….. செல்ஃபி இளைஞருக்கு….. பாடம் புகட்டிய காட்டு விலங்கு….. மீட்டெடுத்த கிராம மக்கள்….!!

நெல்லை அருகே செல்பி எடுக்க சென்ற சமயத்தில் காட்டில் தொலைந்த வாலிபரை அப்பகுதி கிராம மக்கள் பத்திரமாக மீட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் தமிழக கேரள எல்லையான செங்கோட்டை பகுதியை அடுத்த ரோஸ் மலைப்பகுதி சுற்றுலா பயணிகளுக்கான ஒரு இடமாக உயர் கோபுரம் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.  இங்கே வனத்துறையினர் எப்போதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பர். அந்த வகையில் சுற்றுலாவிற்காக ஒதுக்கப்பட்ட இடங்களை தவிர்த்து மற்ற இடங்களுக்கு செல்லக்கூடாது என்று வனத்துறையினர் சார்பில் அறிவுறுத்தப்பட்ட போதிலும்,

சுமேஷ் ராஜேஷ் என்கின்ற இரண்டு இளைஞர்கள் செல்ஃபி எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் அனுமதி இன்றி சென்றுள்ளனர். அப்போது  ஏதோ ஒரு வகையான காட்டு விலங்கு இவர்களைத் தாக்க வருவதை உணர்ந்ததும் அங்கிருந்து இருவரும் செய்வதறியாது திசைமாறி தப்பி ஓடி உள்ளனர். இதில் ராஜேஷ் ஐந்து மணிநேரத்திற்கு பின் போராடி உயர் கோபுரம் அமைக்கப்பட்ட இடத்திற்கு ஒரு வழியாக சென்று விட காட்டினுள் மேலும் ஐந்து கிலோமீட்டர் ஓடிய சுமேஷ் தப்பிக்க வழியின்றி செல்போன் மூலம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க நினைத்தபோது அதிலும் சிக்னல் இல்லை.

இதையடுத்து மரத்தின்மேல் ஏறி காவல் நிலையத்தில் ஒருவழியாக தகவல் தெரிவிக்க, அவரைத்தேடி வனத்துறையினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இரவு முழுக்கத் தேடியும் கிடைக்காததால் மறுநாள் காலையில் தேட திட்டமிட்டனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் மீண்டும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது காட்டுப்பகுதியில் மயங்கி கிடந்ததை கண்டதும் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின் சிகிச்சை முடிந்த பின் அவர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து சுமேஷ் பெற்றோர்களும், உறவினர்களும் பையனை மீட்ட ஊர்மக்களுக்கு நன்றி தெரிவித்தனர். செல்பி என்ற மோகத்தில்  சுற்றித்திரியும் மற்ற வாலிபர்களுக்கு இது ஒரு நல்ல பாடமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |