தனது 70ஆவது பிறந்தநாளையொட்டி இப்போ இ ‘Now or Never’ என வாசகம் பொறிக்கப்பட்ட கேக்கை வெட்டி நடிகர் ரஜினிகாந்த் கொண்டாடினார்.
நடிகர் ரஜினி ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் என்றும் டிசம்பர் 31ஆம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் அண்மையில் தெரிவித்தார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம், இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல” என்று அவரது பதிவில் ஹேஸ்டேக் போட்டு குறிப்பிட்டார்.
அந்த ஹேஷ்டேக் டிரெண்டானது. இதுவே அவரின் தேர்தல் முழக்கமாக மாறியது. தற்போது அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு அவரது இல்லத்தில் இப்போ இல்லேனா எப்பவும் இல்லை என்று பொருள்படும்படி ‘Now or Never’ என வாசகம் பொறிக்கப்பட்ட கேக்கை வெட்டி நடிகர் ரஜினிகாந்த் கொண்டாடினார்.