தமிழகத்தில் உள்ள அரசு துறைகளுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுக்க டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு நடத்தப்படுகிறது. இதன் மூலமே தமிழக அரசுத் துறைகளில் உள்ள அனைத்து பணிகளும் நிரப்பப்படுகின்றன. தேர்ச்சி பெற்ற பணியாளர்கள், அரசுப் பணியாளர்களாக பணிபுரிந்து வரும் நிலையில் அவர்களின் துறைத் தேர்வுகள் அனைத்தும் இனி ஆன்லைனில் நடத்த டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது.
அரசு ஊழியர்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு பெற துறைரீதியான தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். எழுத்துத் தேர்வு முறையில் நடைபெற்று வந்த இந்த தேர்வு வரும் காலங்களில் ஆன்லைன் நடத்தப்போவதாக கூறியுள்ளது